முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைகிறார்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய இஸ்தாபகர்களில் ஒருவரான சேகு இஸ்ஸதீன் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பிலிருந்து தகவலொன்று கிடைத்துள்ளது.

மீண்டும் கட்சியில் சேகு இஸ்ஸதீன் இணைக்கப்படுவாராயின் கட்சியின் முக்கிய பதவியொன்று எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.