சாட்டோ மன்சூருக்கு மாகாண சபையில் போட்டிய வாய்ப்பு; கட்சிபீடம்மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் செம்மண்ணோடையை தளமாக கொண்டு செயற்பட்டு வருகின்ற சமூக சேவையாளர் சாட்டோ மன்சூரை எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக பரிசீலித்து வருகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா போன்றோர் இவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்து உள்ளார்கள் என்று தெரிகிறது.
பொதுநல செயற்பாடுகள் காரணமாக வாழைச்சேனையிலும், அண்டிய இடங்களிலும் இவருடைய செல்வாக்கு அபரமிதமாக அதிகரித்து செல்கின்ற நிலையில் இவருக்கான வெற்றி வாய்ப்பு மீது தலைவர் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கை வைத்து உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.