நல்லாட்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்; ஜோனுக்கு கி.மு.ஊ.ச கண்டனம்அண்மையில் வத்தளை பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை தாக்க முயன்ற அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுக்கு பலத்த கண்டனத்தை கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் அனுப்பிவைத்துள்ள கண்டன அறிக்கையில்,

நல்லாட்சியில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எந்தவித அச்சுறுத்தலுமு் வராது என குறிப்பிட்ட இந்த அரசு ஊடகவியலாளரை தாக்க முயன்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும், தகாத வார்த்தை பிரயோகத்தால் திட்டியும் தாக்க முயன்றிருப்பதையும் ஜனாதிபதி கண்டிக்க வேண்டும்.

நல்லாட்சியானது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செய்ய மந்த நிலை வகிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.