இந்தியாவில் நோன்பு வைத்திருந்த முஸ்லிம் பெண் பணியாளர் மீது சக ஊழியர் தாக்குதல்!அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ரமலான் நோன்பு வைத்திருந்த முஸ்லிம் பணியாளர் மீது சக ஊழியர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியின் சிந்தனுர் நகராட்சியில் வேலை செய்து வருபவர் நஸ்ரின். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

நோன்பு நேரமாதலால் பணிக்கு தாமதாமக வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக ஊழிய சரணப்பா நஸ்ரினை காலால் எட்டி உதைத்துள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்து காவல்துறையிடன் நஸ்ரின் புகார் அளித்தார். இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறை, சனிக்கிழமை விடுமுறை நாள் என்றபோதிலும், சில பணிகள் கிடப்பில் இருந்துள்ளதால், இருவரும் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். கணனி ஆபரேட்டராக தற்காலிக பணியில் சரணப்பாவும், அவருக்கு பணிகள் ஒதுக்கும் அதிகாரியாக நிரந்தர பணியில் நஸ்ரினும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கடைப்பிடிப்பதனால் நஸ்ரின் பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரணப்பா நஸ்ரினை தாக்கியதாக தெரிவித்துள்ளது.