சாய்ந்தமருது ஷுறா சபையின் கொள்கைப் பிரகடனமும் இப்தாரும்!எம்.வை.அமீர் -

சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காட்டை தளமாக வைத்து அப்பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் இன்னோரென்ன விடயங்களை மேற்பார்வை செய்வதற்கும் சம்மந்தப்பட்டோருக்கு அழுத்தங்களை கொடுத்து மக்களையும் விளிப்பூட்டுவதற்க்காக உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது ஷுறா சபையின் கொள்கைப்பிரகடன நிகழ்வும் இப்தாரும் அவ்அமைப்பின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் மாளிகைக்காடு பிஷ்மில்லாஹ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் 2017-06-15 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது ஷுறா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தை வாசித்ததுடன் அதற்கான விளக்கங்களையும் வழங்கினார்.

இப்பிரதேசத்தின் சில திட்டமிடப்படாத செயற்பாடுகளால் பிரதேசம் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் சரியான அரசியல்  தலைமைத்துவம் இன்மையால் அவரவருக்கு நினைத்தையெல்லாம் செய்வதாகவும் எதிர்கால சந்ததிகளுக்கு நம் பிரதேசத்தை முழுமையான பிரதேசமாக கையளிக்க வேண்டியதன் அவசியம் நிலவுவதாகவும் அதற்காக இப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் போன்ற அமைப்புக்களுடன் இணைந்துகொண்டு களத்தில் இறங்கி செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

பிரதேசம் அபிவிருத்தியுற மார்க்க அறிவினதும் பிற கல்விச்செயட்பாடுகளினதும் விருத்திக்கும் இங்கு பிரரணைகளும் முன்வைக்கப்பட்டன. குறித்த விடயங்களில் உள்ள சீர்கேடுகளை உடனடியாக கண்டறிந்து அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் வைத்தியசாலையின் எதிர்காலம்கரைவாகு வட்டை திட்டமிடப்படாத வகையில் மூடப்படுவதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அதற்காக அதனை சீராக செய்வதற்காக கையாளவேண்டிய பொறிமுறைகள் சாய்ந்தமருது தோனாவின் அவலம் என பல்வேறு விடயங்கள் இங்கு  விவாதிக்கப்பட்டன.

நிகழ்வில் ஷூரா சபையின் பிரதி தலைவர்  அஷ்செய்க். எம்.ஏ.நுஹ்மான் (நளீமி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார். இப்தார் நிகழ்வுக்காக கட்டார் சரிட்டி உதவி வழங்கியிருந்தது.

சாய்ந்தமருது மாளிகைக்காட்டை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் துறைசார்ந்த பலரும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தது குறிப்பிடத்ததக்கது.