மனிதம் செத்துவிடவில்லை: ஏழை முஸ்லிம் நோயாளிக்கு உதவிய இந்துக்கள்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் இளம்பெண்ணுக்கு உதவி புரிந்து நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்ததில் டாக்டர் சீனிவாச ரெட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியா ஐதராபாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகள் சனா மரியம். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எலும்பு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்த சனா மரியத்திற்கு சிகிச்சை அளிக்க சுமார் 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் சனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சீனிவாச ரெட்டி, சனாவின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் கொடுத்தார். மேலும் டாக்டர் சீனிவாச ரெட்டியும் அவரது சொந்தப் பணமாக ரூ 50 ஆயிரம் கொடுத்தார். அவரது நண்பர் மஹேந்திரா ரூ 2 லட்சம் உதவி புரிந்தார்.

இந்நிலையில் நிஜாமாபாத் எம்.பி கவிதாவும் தகலறிந்து முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவி புரிந்தார். இதனை அடுத்து சனாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குணமடைந்து வரும் சனா குடும்பத்தினர், டாக்டர் சீனிவாச ரெட்டி மற்றும் மஹேந்திரா, எம்.பி கவிதா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஹாஃபிஸ் ஜுனைத் போன்ற பிஞ்சுக்கள் ஈஃவு இரக்கமின்றி கொல்லப்பட்டு மனிதம் செத்துக்கொண்டிருக்கும் நாட்டில் ஏழை முஸ்லிம் கேன்சர் நோயாளிக்கு உதவி புரிந்ததன் மூலம் மனிதம் செத்துவிடவில்லை என்றும் பலரும் நிரூபித்து வருகின்றனர்.