இலங்கை-பாகிஸ்தான் பலப்பரீட்சை இன்று


இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதும் தீர்மானம் மிக்க இறுதிக் கிரிக்கெட் போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்தின் காடீப் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் உபாதைக்குள்ளான திஸர பெரேரா இன்று களமிறங்குவார் என இலங்கை அணியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாள் போட்டித் தொடர் பட்டியலில் 7 ஆம் 8 ஆம் இடங்களில் உள்ள இரு அணிகளே இன்று மோதவுள்ளன.
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானுடன் இலங்கை அணி நாட்டுக்கு வெளியில் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகின்றது.
இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டது. தென்ஆபிரிக்க அணி போட்டியிலிருந்து வெளியேறியது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி பீ குழுவில் இறுதிச் சூற்றுக்குத் தெரிவாகவுள்ளது.
சுற்றில் இலங்கை அணி பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில், இன்றைய போட்டிக்கு மழை குறுக்கிட்டு போட்டி இடையில் தடைப்பட்டாலும், இலங்கைக்கு இறுதிச் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இலங்கை நேரப்படி இன்றைய போட்டி மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது