கத்தாரில் வசிக்கும் அனைவருக்கும் முக்கிய வேண்டுகோள் - வெளியில் வராதீர்கள்கத்தரிலிருந்து முஜீப்

கத்தாரில் கடும் வெப்பமான நிலைமை நிலவுவதால் காலை 11:30 - 3:00 வரை வெளியில் வேலை செய்யத் தடை செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (Ministry of Labour and Social Affairs (MOLSA)) தெரிவித்துள்ளது.  இந்த தடை ஜுன் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை அமூலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சு விடுத்துள்ள செய்தியில் திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் காலை நேரத்தில் 5 மணித்தியாலங்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்பட வேண்டும். அதாவது 11.30க்கு முன்னர் 5 மணித்தியாலங்களும், மாலையில் 3.00 மணிக்குப் பின்னர் ஏனைய மணித்தியாலங்களும் வேலையில் வழங்கப் படவேண்டும் என்தாக அறிவித்துள்ளது. 

மேலும் வேலை தளங்களில் ஓய்வு எடுப்பதற்கான இடங்களும், குடிநீரும் தகுந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்தாக அறிவித்துள்ளது. Labour Inspection Department யின் அதிகாரிகள் மேற்படி சட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றவனவா? என்பதாக கண்காணிப்பர் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.