இந்தியாவின் ஏவுகணையுடன் நூருல் இஸ்லாம் பல்கலையின் செயற்கைக் கோள்இந்தியாவின் மற்றுமொரு ஏவுகணை 31 செயற்கைகோள்களுடன் இன்று (23) காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் இதிலுள்ள செயற்கைக் கோள்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு நானோ  செயற்கைக்கோளும் அனுப்பப்படுவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரோவின் இந்த ஏவுகணை   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக ரீதியாக ஆன்ட்ரிக்ஸ் மூலம், கார்டோசாட் – 2 செயற்கைக்கோளுடன் துணை செயற்கைக்கோளாக 29 நானோ வகை செயற்கைக்கோள்களும் இன்று ஏவப்பட்ட ஏவுகணை தாங்கிச் செல்கின்றது.
இதேவேளை, இஸ்ரோ அனுப்பிய மாங்கள்யான் செயற்கைகோள், ஜூன், 19 ஆம் திகதியுடன், 1,000 நாட்களை கடந்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.