அல்-கிம்மா நிறுவனத்தினால் ரமழான் கால உலர் உணவு விநியோகம்கடந்த 6வருட காலமாக கல்குடாவில் இயங்கிவரும் அல்கிம்மா நிறுவனமானது இனமத வேறுபாடுகளின்றி பல சேவைகளை செய்து வருகின்றது. 

அதன் தொடரில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்கள் இனங்காணப்பட்டு நோன்பு நோற்பதற்குத் தேவையான உலர் உணவுப் பொதிகளை எமது நிறுவனம் வழங்குகின்றது. 

அதற்கமைய இம்முறையும் சுமர் 350க்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு 2.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

சவூதியரேபியாவைச் சேர்ந்த அல்-கிம்மா நிறுவனத்தின் தவிசாளர் முதீப் தவாப் அஸ்ஸபீஈ உள்ளிட்ட சவூதியரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களினாலும் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்-ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) மற்றும் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர் ஆகியோரினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. 

செய்தியாளர்
எம்.ஐ.அஸ்பாக்