இனியாவது அனைத்து அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அஹமதுவின் தாயார் அகீலா பானு இந்தியாவின் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணியை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. இந்தியாவை பொறுத்தவரை பல வெற்றிகளை புசித்துவிட்டதால் இது பெரிய தோல்விய் இல்லை என்றாலும் பாகிஸ்தானை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றியாகும். பல நெருக்கடிகளுக்கிடையில் பாகிஸ்தான் இந்த வெற்றியை ஈட்டியுள்ளது.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது, "இது ஒருநாள்.. இருநாள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய வெற்றி அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நெடிய நாள்களுக்கு இந்த வெற்றி நினைவில் நிற்கவேண்டிய ஒன்று. எப்பேற்பட்ட வெற்றியை பெற்றுள்ள நாங்கள் துரதிர்ஷ்ட வசமாக எங்கள் நாட்டில் விளையாடாமல் துபையில் விளையாடி வருகிறோம்.

இனியாவது அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் வந்து விளையாட வேண்டும்." என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவின் தாயார் அகீலா பானு இந்தியர். உத்தரப் பிரதேச மாநிலம் எட்வா பகுதியைச் சேர்ந்தவர். கராச்சி நகரைச் சேர்ந்த ஷகீல் அகமதுவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டப் பின்னரே, அகீலா பானு பாகிஸ்தான் சென்றமை குறிப்பிடத்தகக்து.