Jun 25, 2017

இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் சம்பிக்க ரணவக்க போன்றவர்களை அரசாங்கம் அடக்க வேண்டும்இன ஐக்கியத்தை சீர்குலைக்கும்  இனவாத அமைப்புக்களின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு துணை போகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களை அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

பொதுபலசேனா போன்ற இனவாத  அமைப்புக்களின் தோற்றத்துக்கு காரணமான சம்பிக்க ரணவக்க போன்றவர்களே இன்றளவும் முஸ்லிங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர் என மக்கள் முழுமையாக நம்புவதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் நிலவும் நிலை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தௌிவுபடுத்துகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலும் பொதுபலசேனாவுக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதையும் அந்த ஆட்சி வீழ்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் கவனத்திற் கொள்ள வேண்டும்

இதற்கு முன்னர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஹலால் தொடர்பில் பிரச்சினையொன்றை உருவாக்கி முஸ்லிங்களை சிக்கலு்க்குள் சிக்க வைத்த தருணத்தில் அமைச்சுப் பொறுப்பினை வகித்த சம்பிக்க ரணவக்க எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை மக்கள் இன்றும் மறந்து விடவில்லை,

மென்மேலும் அந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கும் வகையிலேயே அவரது ஊடக சந்திப்புக்கள் மற்றும் பாராளுமன்ற உரைகள் அமைந்தன என்பதை நாம் அறிவோம்,

அது மாத்திரமன்றி அளுத்கம சம்பவத்தின் போது  முஸ்லிங்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட போது யார் அதற்கு முழுமையான காரணம் யார் தௌிவாக தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறிதளவேனும் அக்கறையின்றி யாரை நியாயப்படுத்த முயற்சித்தார் என்பதை அன்று வௌிவந்த செய்திகளை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் கடந்த வருடம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்ட போது  தேரர்களானால் அவர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் சட்டத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் அவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற கோணத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்ட வேண்டும்,

பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரரின் இன்றைய செயற்பாடுகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே பகிரங்கமாக அறிவித்திருந்தார்,

ஆகவே இன்று நாளுக்கு நாள் முஸ்லிங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது  வெறுப்பு கோஷங்களை முன்வைத்து  தோற்றம்பெற்றுவரும் இனவாத அமைப்புக்களுக்கு தூண்டுகோலாயுள்ளவர்கள் யார் என்பது வௌிப்படையாக தெரிகின்றது,

தமது சுயலாப அரசியலுக்கு இனவாதத்தையும் சிறுபான்மையினர் மீது வன்முறையையும் ஏவிவிடும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க  போன்றவர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் கடுந்தொனியில் எச்சரிக்க வேண்டும்.

சம்பிக்க ரணவக்க வௌியிட்ட ஜிகாத் எனும் புத்தகத்தில் என்னை குற்றஞ்சாட்டி கிழக்கு முதலமைச்சர் கிழக்கில் தனி முஸ்லிம் நாடொன்றை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவதாக முட்டாள்தனமான பெரும்பான்மை மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக எழுதியிருந்தார்,

நாங்கள் முஸ்லிங்கள் எப்போது எல்லோருடனும் இணைந்து வாழவே விரும்புகின்றோம் .நாம் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் என்றும் நிலவ வேண்டும் என்று தான் பிரார்த்திக்கின்றோம்,

இந்த  நாட்டின் நலனுக்கான முஸ்லிங்களான நாங்கள் முன்னிற்கும் அதேவேளை நாட்டின் அமைதியையும் குழப்பும் அமைச்சர் சம்பிக்க போன்றவர்களை எதிர்த்து குரல் கொடுக்க நாம் தயங்கப்போவதில்லை .

அத்துடன் தமது குறுகிய அரசியல்  லாபங்களை  நிறைவேற்றிக் கொள்ள பாரிய திட்டமிடல்களுடன் இனவாதத்தை தூண்டி அதனூடாக குளிர்காயும் சம்பிக்க போன்றவர்கள் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இதனைக் கவனத்திற் கொண்டு இனவாதத்தை தூண்டும் அமைச்சர்களை உடன் அரசாங்கத்திலிருந்து வௌியேற்றுவது அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network