மூன்றாவது நாளாகவும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(க.கிஷாந்தன்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு 24.06.2017 அன்றும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தும் 22.06.2017 அன்று காலை 8 மணி முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் வழமை போன்று இயங்குகின்றன.

22.06.2017 அன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் இவ்வாறான நிலைமையை காணக்ககூடியாத இருந்தது.