முக்கிய அறிவிப்பு - பட்டாசுகள் கேளிக்கைகள் அற்ற பெருநாளை கொண்டாடுங்கள்இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அதிகளவானோர் நாளை பெருநுாளை கொண்டாடவுள்ள நிலையில் பெருநுாள் கொண்டாடப்படும் பிரதேசங்களில் பட்டாசுகள் மோட்டார் வாகன கேளிக்கை ரோந்துகளும் இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டாசுகளில் வகை வகையாக கொளுத்துவதும், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்துவதுமாக உள்ளனர் என அங்கலாய்த்த எமது செய்தியாளர்கள், இவற்றினை எமது சகோதரர்கள் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுள்ளனர்.

மற்றைய சமூகத்திற்கு முன்மாதிரிகளாக இருப்போம் அதைவிடுத்து நற்பெயரை கெடுக்காதிருப்போம்