Header Ads

ad728
  • Breaking News

    போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்

    எம்.ஜே.எம்.சஜீத்

    போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அர்ஹம் வித்தியாலயம், அறபா வித்தியாலயம், அந்-நூர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு  கருத்தரங்கு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தலைமையில் நேற்று (04) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

    இதன் போது வளவாளர்களாக மனூஸ் அபூபக்கர், 
    அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728