சொர்க்கத்திற்குச் செல்ல, கடவுச்சீட்டு வழங்கிய ISIS பயங்கரவாத முட்டாள்கள்


ISIS என்று அழைத்துக் கொள்ளும் பயங்கரவாதிகள் குழு தமது உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ‘சொர்க்கத்திற்கு கடவுச்சீட்டு’ விநியோகித்துள்ளது.

வடக்கு சிரியாவில் ஐ.எஸ் இடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில் இருந்து இந்த கடவுச் சீட்டின் பிரதி ஒன்றை சிரிய பாதுகாப்பு படைகள் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தின் புகைப்படம் சமூக தளத்தில் பரவியுள்ளது.

‘சொர்க்கத்திற்கான கடவுச்’ சீட்டு என்று இதன் முன் அட்டையில் எழுதப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதை உறுதியளிக்க ஐ.எஸ் இந்த கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கடவுச்சீட்டில் பச்சை நிற அட்டையில் தங்க நிற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த கடவுச் சீட்டில் தனிப்பட்ட ஒருவரின் பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது.

எனினும் இதனை வைத்திருப்பவர் பாத்திரம் நரகத்திற்கு செல்லாமல் சுவர்க்கத்திற்கு மாத்திரமே செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. தவிர, தற்கொலை தாக்குதலை ஊக்குவிக்கும் வாசகங்களும் இந்த கடவுச் சீட்டில் எழுதப்பட்டுள்ளது.