JUST IN மருதானையில் முஸ்லிம் ஒருவரின் பேக்கரிக்கு தீவைப்பு; விசாரணை தீவிரம்


மருதானை மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான த பேர்கரி கொர்னர் என்ற ஹோட்டல் மீது நள்ளிரவு – 12.30 மணியளவில் தீமூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்பகுதியினால் இந்த தீ வைப்பு  மேற்கொள்ளப்பட்டதாக அருகிலிருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்

ஹோட்டலில் பலத்த தீ வெளியானமையினால் சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது