Header Ads

ad728
 • Breaking News

  NFGG ம் அப்துர் றகுமானின் ஒரு சொத்தாகவே பார்க்கப்படுகிறது


  முஹம்மத்  இஹ்லாஸ் - ஏறாவூர்

  இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை வகிக்கலாம் என நம்பப்பட்டநல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா என்று நோக்கின் அதுவழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையேகாணக்கூடியதாக உள்ளது.

  பல தூய நோக்கங்களும் பலரது தன்னலமற்ற உழைப்பும் கட்சியின் தலைவர் பதவியிலிருப்பவருக்குபதவியெடுக்க பயன்படுத்தப்படுவது போலவே தெரிகிறது.இந்நாட்டு முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்தபோது அரசியலில் முஸ்லிம்களுக்காகப் போராட மாற்று அமைப்பொன்று இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் NFGG யின் பிரச்சாரங்கள் அவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு ஒளிக் கீற்றாகஅமையும் என்று நம்பினர். ஆனால் இன்றைய நிலையில் NFGG யும் வழமையான தேர்தல் காலகட்சியாகவே செயற்படுகிறது.

  யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மஹிந்த காலத்தில் இருந்ததை விட மோசமான ஒரு சூழலே இன்றைய நிலமையில் உள்ளது.

  முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆளாளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு ஊடகஅறிக்கையில் தமது கவலைகளை சொல்லி விட்டு செல்கின்றனர். ஆனால் ஆக்கிரமிப்புகள்முடிந்தபாடில்லை. சிக்கல்களை ஏற்படுத்தியவர்களிடம் பேசாது சிக்கலுகக்குள்ளான சதிகளுக்குள் அகப்பட்டமக்களிடம் படம் காட்டுகிற ஒரு நிலையே காணப்படுகிறது அதை NFGG யும் செய்வது கவலையளிக்கிறது.

  இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டு சேர்த்த நல்லாட்சிக்கானதேசிய முன்னணி இன்றைய நிலையில் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களுக்கு எதிராகஎத்தனை முறை ஜனாதிபதியை பிரதமரைச் சந்தித்து இருப்பீர்கள்? அதைச் செய்ய தங்களிடம் போதியஅதிகாரம் இல்லை என்று சொல் கிறீர்கள். அப்படி என்றால் எந்த அரசியல் இயலுமையும் இல்லாத நீங்கள்எப்படி இந்த அரசாங்கத்தில் எமக்காக முன்நிற்க முடியும்.

  இன்று முஸ்லிம்களுக்காக அரசியல் செய்ய வருபவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். அந்தளவிற்கு நமது சமூகம் பல பக்க பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. அதைவிட்டு தங்களுக்கு ஓய்வுகிடைக்கிற போது முஸ்லிம் அரசியலைப் பற்றி யோசிப்பதும் பேசுவதும் ஊடக அறிக்கைகள் விடுவதுமாகஇருப்பதனால் எதையும் இந்த சிங்கள பேரினவாத அரசிடமிருந்து பெறமுடியாது.

  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி BCAS Owner அப்துர் றகுமான் எஞ்சினியருக்குச் சொந்தமானது. அவர்ஒரு பெரிய தொழிலதிபர்.

  பல நாடுகளில் பல தொழில்கள் செய்பவர். இவை எல்லாவற்றையும் முடித்து நேரம் கிடைக்கும் போதுமுஸ்லிம் அரசியல் பற்றி யோசிப்பவர் என்பதற்கு மறுகருத்து இருக்காது.ஒரு கட்சியின் தலைவரே சாதரண தொண்டன் நிலையிலிருந்து எதைச் சாதிக்க முடியும்? NFGG யின் பலஆயிரம் தொண்டர்களது உழைப்பும் தியாகமும் அப்துர் றகுமான் எஞ்சினியருக்கு பதவி எடுக்கபயன்படுத்தப்படுவது பலரது ஜனரஞ்சக போராட்ட மனப்பான்மையை சோர்வடையச் செய்கிறது.  

  மேலும் அப்துர் றகுமான் எஞ்சினியர் நிறைவேற்றுநராகவுள்ள BCAS Campus நிறுவனம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற ஒழுக்க மற்றும் இஸ்லாமிய கலாசாரநடைமுறைகளுக்கு எதிரான செயற்பாடுகள் NFGG நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் குறைகளாகபார்க்கப்படுகிறது. காரணம் BCAS ஓனரால் தலைமை வகிப்பதனாலேயாகும். NFGG ம் அப்துர் றகுமானின்ஒரு சொத்தாகவே பார்க்கப்படுகிறது.   அத்துடன் காசு உள்ளவர்கள் தான் முஸ்லிம் அரசியலை தலைமை தாங்க வேண்டும் என்றால் இப்போதுமுஸ்லிம்கள் மத்தியில் இருக்கிற கட்சிகள் போதுமே. NFGG யை கலைத்து விடலாமே? 

  இதைவிடுத்து தற்போது NFGG ல் அடுத்த கட்டத்தில் இருப்பவர்களிடம் தலைமைப் பொறுப்புக்களைகொடுத்து விட்டு அப்துர் றகுமான் எஞ்சினியர் நிதிப் பங்களிப்புகளை வழங்கலாமே. இவ்வாறானசூழ்நிலைகளில் அப்துர் றகுமான் எஞ்சினியர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாகாண சபைஉறுப்பினராகவோ தெரிவு செய்யப்படுவதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.    

  அரசியலில் பணக்காரராக இருந்தால் மக்கள் பணத்தை களவு எடுக்க மாட்டார் என்று எதிர்பார்ப்பது மட்டும்தலைமைத்துவத்தின் முழுத் தகுதி ஆகிவிடாது. அது ஒரு தகுதி மட்டுமே. எமக்குத் தேவை எமக்காகமுழுநேரம் முஸ்லிம் அரசியல் பற்றிச் சிந்திக்கக் கூடிய, மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு வழங்கும்வருவாயில் வாழத் தெரிந்த ஒருவரே.

  எனவே அப்துர் றகுமான் எஞ்சினியர் முழுநேர அரசியல்வாதியாக மாற வேண்டும் அல்லது அப்படிஇந்த சமூகத்திற்காக வேலை செய்யக்கூடிய ஒருவரிடம் NFGG யின்தலைமைத்துவத்தை ஒப்படைப்பேயாகும். 

  அவ்வாறில்லாத நிலையில் NFGG யினால் இந்த சமூகம் எதையும் அறுவடை செய்யப் போவதில்லைஎன்பது கண்கூடு. 

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728