வடக்கிற்கு புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்(SDIG) பதவியேற்புபாறுக் ஷிஹான்-

வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கே.ஈ.ஆர்.எல் பெர்ணான்டோ கடமையை பொறுப்பேற்றுள்ளார். காங்கேசந்துறை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில்    சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார்.

இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்ததோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம் பெற்றது.

இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 6 ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக வட பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது