தம்பர அமில தேரருக்கு சிங்களத்தால் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் அன்பளிப்புஜயவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரர் பேருவலைப் பகுதிக்கு நேற்று (26.06.2017) விஜயம் மேற்கொண்டார். அப்போது “தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை என்றும் அதனை படிக்க தான் விரும்புவதாகவும்” தெரிவித்த கருத்து வெளியிட்ட தேரருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) மக்கொன, சீனன்கோட்டை கிளை சார்பில் சிங்கள குர்ஆன் மொழியாக்கம் உடனடியாக வழங்கி வைக்கப்பட்டது.