10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் உடன் இடமாற்றம்


ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளுக்கான முன்னாள் பணிப்பாளரை நீக்குவதற்கான காரணமும், இடமாற்றம் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமையே ஆகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஒரே பாடசாலையில் பல வருடங்கள் சேவையாற்றும் ஆசிரியர்களினால் பாடசாலை நிருவாகத்தைக் கொண்டு செல்ல பல்வேறு தடைகள் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனாலேயே இத்தீர்மானத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்