அமெரிக்க குடியுரிமை பெற்றதற்காக 10 ஆண்டு சிறைதண்டனை :ஈரான் நீதிமன்றம் உத்தரவுஈரான் நாட்டில் கடந்த சில வருடமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரியா, கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்று வசித்துவரும்  நபர்களை உளவு பார்த்ததாகவும், அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி ஈரான் அரசு கைது செய்து வருகிறது.

இந்நிலையில், உளவு பார்த்ததாக ஈரான் போலிசாரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள நபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த நபர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.