அமெரிக்கா ராணுவத்தின் வான் தாக்குதலில் 10 ஆப்கானிய வீரர்கள் பலிஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள ஹெல்மந்த் மாகாணத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை குறிவைத்து நேற்று அமெரிக்க வான்படையினர் குண்டுகளை வீசினர்.

ஆனால், இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் தவறுதலாக கொல்லப்பட்டனர். இது துரதிர்ஷ்டவசமாக நடைபெற்ற விபத்து எனவும், பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

10 ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தாலும், குறைந்தது 35 வீரர்கள் பலியாகிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.