இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலிஇந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒரு படகு நேற்று கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்தபோது அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி தேடல் மற்றும் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்திருக்கலாம் என்பது தற்போது எங்களின் நம்பிக்கை. காணாமல் போனவர்கள் என்று குடும்பங்களால் கூறப்பட்டிருப்பவர்கள் மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்தோனேசியா-மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் நேரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.