குடிநீர் தேவைக்கான அவசர அழைப்பு 117


நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீர் விநியோகிக்கும் செய்றாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் இந்த தொலைபேசி இயக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.