ஈராக் அகதிகள் முகாமில் தற்கொலை படை தாக்குதல் 14 பேர் பரிதாப பலிஈராக்கில் புலம் பெயர்ந்த ஈராக்கியர்கள் தங்கியிருந்த முகாமில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.  ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமடி நகரில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. 

இதில் புலம் பெயர்ந்த ஈராக்கியர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த முகாமிற்குள் தற்கொலை படை பெண் தீவிரவாதி ஒருவர் அதிரடியாக புகுந்து தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். 

இதில் பெண்கள் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் உள்பட மொத்தம் 14 பேர் பலியாகினர். 13 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.