தீவிரவாதிகள் என தவறாக நினைத்து நைஜரில் ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலிநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது எல்லை தாண்டிச் சென்ற அண்டை நாடான நைஜரில் தாக்குதல்கள் நடத்துகின்றன.
அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜர் ராணுவம் தீவிரமாக உள்ளது. ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று நைஜீரியா எல்லையில் உள்ள அபாடம் கிராமத்தில ரோந்து சுற்றிய ராணுவ வீரர்கள் 14 பேரை சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் தான் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அனைவரும் அப்பாவி பொதுமக்கள் விவசாய கூலி வேலை செய்பவர்கள் என தெரியவந்தது. 


நைஜர் நாட்டில் நைஜீரியா எல்லையில் உள்ள டிப்பா மகாணத்தில் பெரும் பாலான இடங்களில் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை நடக்கிறது.