சிரியாவில் கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலிசிரியாவில் டமாஸ்கஸ் நகரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 3 கார்களை தீவிரவாதிகள் ஓட்டி  வந்துள்ளனர். 

இதில் 2 கார்களை பாதுகாப்பு படையினர் தடுத்து வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். இந்நிலையில் தாஹிர் சதுக்கம் பகுதிக்குள்  நுழைந்த மற்றொரு காரைதடுத்த போது அதிலிருந்த தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். காரில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கர  சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

இதில் 18 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், இரண்டு பேர் பொதுமக்கள் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.