Jul 27, 2017

19 சிறுமிகள் சிறுவர் இல்ல காப்பாளியின் கணவரினால் துஷ்­பி­ர­யோகம் கணவர் கைது

கொஹுவலை பொலிஸார் தீவிர விசாரணை 


மேல் மாகாண சபையின் நன்­ன­டத்தை மற்றும் சிறுவர் பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் கொழும்பை அண்­மித்த, கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் உள்ள 19 சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில், அந்த இல்­லத்தின் காப்­பா­ள­ரான பெண்ணின் கணவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். நேற்­றைய தினம் அவரை கைது செய்­த­தா­கவும், தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வாக, அந்த அதி­கார சபை கொஹு­வலை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இந்த கைது நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த சிறுவர் இல்­லத்தின் சிறு­மியர் உடை மாற்றும் அறையில் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­படும் சி.சி.ரீ.வி. கம­ரா­வி­னூ­டாக எடுக்­கப்­பட்ட படங்கள் பதி­வா­ன­தாக நம்­பப்­படும் உப­க­ர­ணத்­தி­னையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக இரவு வேளை­களில் குறித்த சிறு­மியர் சந்­தே­க­ந­பரால் ஸ்பரிசம் ரீதியில் தொல்­லை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
கொஹு­வலை பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் பிரி­ய­சாந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழுவே இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.
குறித்த இல்­லத்தில் தங்­கி­யி­ருந்த 10 வய­துக்கும் 17 வய­துக்கும் உட்­பட்ட 19 சிறு­மி­களை நேற்று கொஹு­வலை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து,  பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் ஆலோ­ச­னையின் பிர­காரம் வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன. அதன் பின்னர் சிறு­மியர் வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளுக்கு அமை­வாக 62 வய­து­டைய குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை நீதி­மன்றில் ஆஜர் செய்து எதிர்­வரும் ஆகஸ்ட் மூன்றாம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
சிறுவர் இல்ல சிறு­மி­க­ளிடம் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­மூ­லங்­களைத் தொடர்ந்து அந்த சிறுவர் இல்­லத்­தையும் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ளனர். இரு மாடி­களைக் கொண்ட குறித்த இல்­லத்தின் மேல் மாடியில், உறங்­கு­வ­தற்­கான வச­தி­களைக் கொண்ட பூரண அறைகள் இருந்த போதும் அவை ஒரு­போதும் குறித்த சிறு­மி­ய­ருக்கு பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன்  குறித்த சிறு­மி­ய­ருக்கு சரி­யான முறையில் உணவு, பானங்கள் கூட அங்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
இரவு வேளையில் கீழ் மாடியில் உள்ள இரு அறை­களில் தங்­க­வைக்­கப்­படும் குறித்த சிறு­மியர், சந்­தேக நபரால் அவ்­வப்­போது ஒவ்­வொ­ரு­வ­ராக அழைத்து ஸ்பரிசம் ஊடான பாலியல் தொல்­லை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக  சிறு­மி­யரின் வாக்­கு­மூ­லங்கள் ஊடாக பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே உடை மாற்றும் அறையில் இருந்து சி.சி.ரீ.வி. கமராப் பதி­வுகள் தொடர்­பி­லான உப­க­ர­ணமும் கிடைத்­துள்­ளது.
குறித்த சிறு­மியர் சர்­வ­தேசப் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்று வரும் நிலையில், அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் சென்று அழைத்து வரும் வாக­னத்தின் சார­தி­யா­கவும் குறித்த சந்­தே­க­ந­பரே செயற்­பட்­டுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. சந்­தேக நபர் இரு பிள்­ளை­களின் தந்தை என குறிப்­பிடும் பொலிஸார் அவரது இரு பிள்ளைகளும் வெளிநாடொன்றில் வசிப்பதாக சுட்டிக்காட்டினர்.
இந் நிலையில், இந்த துஷ்பிரயோக சம்பவத்துக்கு சிறுவர் இல்ல காப்பாளரான பெண்ணின் தொடர்புகள் ஏதும் உள்ளதா எனவும், சிறுமியர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் உறுதி செய்ய மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post