1983 ஜூலைக் கலவரத்தில் கொழும்பில் தமழர்களை காத்தவர்கள் முஸ்லிம்கள்கொழும்பு உள்ளிட்ட சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ் மக்களை அதிமதிகம் தங்கள் உயிர்களை துச்சமென கருதி காத்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது,
தமிழை தாய்மொழியாக கொண்ட சமூகம் என்ற காரணமும், இரத்த உறவும் என்ற உணர்வும் அன்று இருந்தது, பிற்காலத்தில் புலிகள் அரசியல் செய்து முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரித்துவிட்டனர்.
எப்போது முஸ்லிம்களும் தமிழர்களும் பிரிந்து சென்றார்களோ அன்றே அவர்களுக்கு கெடுதிகாலம் தான், புலிகளும் அழிந்தனர் அரசியல் தலைவர்களும் அழிந்தனர் இன்றும் தீர்வுகள் இன்றி பயணித்து கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஏனைய பல இயக்கங்களில் முக்கிய பதவிகளில் முஸ்லிம்கள் இருந்தனர், இந்திய இராணவம் அதிக முஸ்லிம்களை கொன்றது, இலங்கை இராணுவம் கடத்தியது சுட்டது இப்படியான ஒரு வரலாறும் இருக்கிறது.
ஜூிலைக்கலவரம் பற்றி பேசும்போதெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவும் பேசப்படுதல் வேண்டும் அத்தோடு வடக்கில் முஸ்லிம்களின் குடியேற்றம் இடம்பெறவேண்டும்