200 கிலோ பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் கதிர்காமம் புனித பூமியில்

கதிர்காமம் புனித பூமி பிரதேசத்திலிருந்து பிளாஸ்ரிக் போத்தல்கள் அடங்கல்களாக சுமார் 200 கிலோ பிளாஸ்ரிக் பொருட்களும், 60 கிலோ எடைகொண்ட பொலித்தீன்களும் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு, அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கதிர்காமம் சௌபசக்தி இளைஞர் சுற்றாடல் அமைப்பின் ஆலோசகர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புனித பூமிக்கு வருகை தந்த பக்தர்களும் பிரதேச மக்களாலும் மேற்றபடிகழிவுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பொழுது கதிர்காமர் பொதுமக்கள் சேவை சுகாதார அதிகாரிகள் கதிர்காமம் பொலிசார் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கதிர்காம புனித பூமிக்கு கொண்டுவரப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இவற்றைக் கொண்டு வருபவர்கள் கதிர்காம புனித பூமிக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பரவிவரும் டெங்கு நோயை இல்லாதொழித்தல் மற்றும் பொதுமக்கள் சுகாதாரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களைக் கவனத்தில் கொண்டு கதிர்காமம் புனித பூமிக்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் பொலித்தீன் பொருட்களுக்கு பதிலாகத் துணிகளினால் தயாரிக்கப்பட்ட பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் சுற்றாடல் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.