சீனா: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 22 பேர் பலிசீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் கிழக்குப்பகுதியான ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் யுஷான் நகரில் உள்ள இரண்டு மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி குடியிருப்பு வாசிகள் 22 பேர் பலியானதாக 
முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.