மெக்சிகோ குய்ரெர்ரோ மாநிலத்தில் உள்ள சிறைக் கைதிகளிடையே கடும் மோதல் - 28 பேர் பலிசர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குய்ரெர்ரோ சிஹுவாவா மாநிலதில் அதிகளவிலான போதை மாபியாக்கள் இயங்கி வருகின்றன. ஓபிலியம் எனப்படும் போதைப்பொருள் இங்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கு இந்த மாநிலத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தின் காபுல்கோ நகரில் சிறைச்சாலை இருக்கிறது.

1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்ட இந்த சிறையில் சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கு சில அடிப்படை பிரச்சனைகள் கூட பெரிதாக வெடிக்கும். சிறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், நேற்று சிறைக் கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது.

கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கைதிகள் எதிர்த் தரப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் சிக்கி 28 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் மோதலின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. போதை மருந்து மாபியாக்களால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உள்துறை செயலர் ஜான் கெல்லி மெக்சிகோ சிட்டி நகருக்கு வந்து, அந்நாட்டு அதிபர் பெனா நிட்டோவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று, முன்தினம் சினாலா மாநிலத்தில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.