உயர்தரப் பரீட்சைக்கான சகல பிரத்தியேக வகுப்புக்களும் ஆகஸ்ட் 2 முதல் தடை;

க.பொ.த.  உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் என்பன எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி நள்ளிரவு  முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டங்களை மீறுவோர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.