Home » » மீரிகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வங்கியில் கொள்ளை; 3 பேர் கைது

மீரிகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வங்கியில் கொள்ளை; 3 பேர் கைது

Written By Ceylon Muslim on Friday, July 7, 2017 | 10:58:00 AM



மீரிகம பிரதேசத்தில் காணப்படும் தனியார் வங்கி ஒன்றில், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி 18 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 3 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்திய டி - 56 ரக துப்பாக்கி மற்று 30 ரவைகள், உந்துருளி, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 கைபேசிகள் என்பன, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பன்னிப்பிடிய, ஹோமாகம மற்றும் அத்துருகிரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி, மீரிகம பிரதேசத்தில் உந்துருளியில் வந்த 2 பேர், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்கள், அத்தனகல நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment