சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடி ரயில் நிலையம்


ரயில் போக்குவரத்தில் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் சீனாவில், மெட்ரோ ரயிலுக்காக பூமிக்கு அடியில் 31 மாடி ரயில் நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புல்லட் ரயில், சுரங்க பாதை ரயில், பறக்கும் ரயில் என்பவற்றை உருவாக்கி சீனா சாதனை படைத்து வருகிறது.
மெட்ரோ ரயிலுக்காக ரோட்டில் இருந்து பூமிக்கு அடியில் ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டு அமைக்கப்படவுள்ளது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரயில்வே நடைமேடைகளுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும்.
அதன் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரயில்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது வடகொரியாவில் பூமிக்கு அடியில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில்  நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.