ஆப்கானிஸ்தான்: வைத்தியசாலை மீது குண்டு வீச்சு தாக்குதல் - 35 பேர் பலி


FILE IMAGE
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிக்கு எதிராக இங்குள்ள தலிபான் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தலிபான்களின் கொலைவெறி தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்து மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போய் கிடக்கின்றனர்.

நாட்டின் சுமார் 40 சதவீதம் பகுதி தலிபான்களின் ஆதிக்கத்தில் கிடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்துக்குட்பட்ட டயாவாரா மாவட்டத்தை தலிபான்கள் கடந்த வாரம் கைப்பற்றினர்.

இந்நிலையில்,  கோர் மாகாணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று தீவைத்த தலிபான் தீவிரவாதிகள் உள்ளே இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.