இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி 54 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய 54 ஏக்கர் காணி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பதற்கான பத்திரத்தை இராணுவம் கையளித்துள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில், இன்று இடம்பெற்ற விசேட வைபவத்தின் போது, காணி விடுவிப்பு பத்திரம் கைளிக்கப்பட்டுள்ளது.


யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி, யாழ். அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.