ஆப்கானிஸ்தானில் 70 கிராமவாசிகள் கடத்தல் - 7 பேர் கொலை

Jul 23, 20170 commentsஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். 

தலிபான்கள் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஆப்கான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி கூறுகையில், “காந்தஹார்-தரின்கோட் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமத்தில் இருந்து 70 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை” என்றார்.

காபூல் மற்றும் காந்தஹார் மனித உரிமை அமைப்புகள் இந்த கடத்தல் சம்பவத்தை உறுதி செய்துள்ளது.
Share this article :