புதையல் தோண்டிய 8 பேருக்கு 10 வரை விளக்கமறியல் கந்தளாயில் சம்பவம்

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சமகிபுர வயல் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த எட்டு பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (29) குறித்த சந்தேகநபர்களையும் அதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும்  கந்தளாய் ​பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
சூரியபுர, சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும், ஹபரண பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.