மாலைத்தீவின் நாடாளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தால் சுற்றிவளைப்புமாலைத்தீவின் நாடாளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அந்நாட்டு இராணுவத்தால் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து , ஆயுதம் தாங்கிய அந்நாட்டு இராணுவத்தால் இவ்வாறு மாலைத்தீவு நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது, சட்ட விரோதமானதும், அரசியலமைப்புக்கு முரணானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.