Jul 25, 2017

தலைவர் அஷ்ரப் மறைவுக்கு பின் பதவியை பறி கொடுத்து சமுகத்தை வாழ வைக்க துணிந்தவர்


அஸ்மி அப்துல் கபூர்
உங்களின் அநாகரிக அரசியல் செயற்பாடு தங்களை வழி நடத்தும் தலைவர்களின் பிறப்பிலிருக்கும் குறைபாட்டு அம்சமாகும்.
அண்மையில் தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ் தமது கட்சி செயற்பாடுகளை விஸ்தரிக்கும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதை அனைத்து தரப்பும் அவதானித்து வரும் சூழலில் வன்னி மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் விஜயம் அரசியல் களத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றம் முக்கிய சில விடயங்களை எடுத்தியம்புகிறது.
அதாஉல்லாஹ்வின் அரசியல் வரலாறுஅவரின் கொள்கைகள்,
அவரால் முன்மொழியப்பட்டு வெற்றியடைந்த விடயங்கள்,
இன்று முன்மொழியப்பட்டிருக்கின்ற அம்சங்கள், அவரின் அரசியல்       தோல்வி,அதற்கான காரணங்கள் என்பனவற்றை சில மஞ்சல் கவர் எழுத்தாளர்களும்,சில கட்சிகளின் அபிமானிகளும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும் விதமும் எழுத்துக்களும் அவர்களின் நாகரிக முறையிலும், பிறப்பு, வளர்ப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளையும் அவதானிக்கமுடிகிறது.

தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ் வின் அரசியல் வரலாறு தொடர்பாக இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டிய சில விடயங்களை தெளிவாக பேச வேண்டியது அரசியல் நிலை கடந்த முக்கியமான தொரு அம்சமாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான விடுதலை சமர் பின்னர் தமிழ் மக்களுக்கான போரட்டமாக மாறி முஸ்லீம் மக்களின் மீது இன வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் சூழலில் தமிழீழ விடுதலை புலிகளின் அடக்குமுறைக்கு எதிராக மறைந்த தலைவர் அஷ்ரபின் கரங்களையும்,அந்த போரட்டத்தையும்முன் கொண்டு செல்ல துணிந்து வந்து கொலை அச்சறுத்தல்களை பொருட்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையின் உருப்பினரானார்.

அதன் பின்னர் கட்சியின் தவிசாளராகவும் மு.கா.யின் முக்கியமான அரணாகவும் இருந்த சேகு இஸ்ஸதீன் கட்சி யை விட்டு பிளவு கண்ட போது கட்சியினை அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் முன் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அதாஉல்லாஹ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின் இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மு.காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம் பிரணேச சபை ஒன்றில் தோல்வியுற்றால் தனது பா.உ பதவியை ராஜனாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த வேளை அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் தோல்வி அடையும் என எல்லோரும் ஆருடம் கூறிய போதும் அந்த ஊரை வெற்றி கண்டு அதாஉல்லாஹ் தலைவரின் சவாலை நிறைவேற்றினார்.

இருந்தாலும் பொத்துவில் ,நிந்தவூர் ,பிரதேசங்கள் தோல்வி அடைந்த போது தலைவர் அஷ்ரப் பதவி துறந்தார்.அதன் பின்னரான காலங்களின் தலைவரினால் விசுவாசத்துக்குரியவராகவும் அவரின் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்ததால் அதாஉல்லாஹ் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் இன்றைய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தலைவராகி சமுகத்தினுடைய அரசியல் இயக்கத்தை ரணிலுடன் இணைந்து வழிப் போக்கு அரசியலாகவும், சர்வதேச சக்திகளிடமும் சிறை படுத்தப்பட்ட போது வடக்கு கிழக்கு முஸ்லீம்களை ஒரு இனமாக கருதாமல், நோர்வே உடன்படிக்கையில் குழு என்றும் மூன்றாம் தரப்பாக உட்கார வைக்காமல் அரச தரப்பாக அமரச் செய்த வேளைதான் அதாஉல்லாஹ் மு.கா தலைவரின் சமுகத்தை விற்றுப் பிழைக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே கட்சியை விட்டு பிரிய வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் பின் தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து அதன் முதலாவது தேசிய மாநாட்டு மேடையில் வைத்து கிழக்கு பிரிக்க பட வேண்டும் என்றும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டு்ம் எனவும் மகிந்த ராஜபக்ச எனும் அன்றைய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியை இருமுறை ஆதரித்து இரு முறை வெற்றியடைய வைத்தார்.அவரது ஆட்சி காலத்தில் பல் வேறு பட்ட அபிவிருத்தி பணிகளை தனக்கு வழங்கப்பட்ட அமைசசுகள் மூலம் சேவையாற்றினார்.

சில இடங்களில் அவரை சேவை செய்ய விடாமல் தடுத்தவர்கள் பின்னர் இவரை பிரதேச வாதியாக காட்ட முயன்றார்கள். மகிந்தவுடைய காலத்தில் வெறும் 40000 அம்பாரை மாவட்ட மக்களின் வாக்குகளினூடாக இவ்வளவு சேவைகளை அதாஉல்லாஹ் எனும் தனி தனிப்பட்ட பா.உ செய்ய முடியுமென்றால் முஸ்லீம்களின் 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்றமு.கா கட்சியால் ஏன் மகிந்த அரசில் அங்கம் வகித்த போதும் சேவையாற்ற முடியவில்லை எனும் கேள்வி இன்னமும் எம்மவர்களுக்கு எழ வில்லையா?
பஷீர் சேகு தாவூத் குமாரியின் பைல்லை மகிந்த வைத்திருந்தார் என விடை கூறியும் எம்மவர்களால் புரியமுடிய வில்லையா?
கல்முனைக்கான நகரசபை கட்டிடத்தை அமைக்க முதல்வர் நிசாம் காரியப்பரிடம் அதாஉல்லாஹ் கோரிய போது கோத்தபாய நதி தந்துவிட்டார் அவரிடம் பேசி விட்டேன் என கல்முனை அபிவிருத்திக்கு வஞ்சகம் இழைத்தவர்கள் யார்?
சாய்ந்தமருதுக்கு நீதியான உள்ளூராட்சி மன்றத்தை அதாஉல்லாஹ் அமைக்க அரச அச்சகத்துக்கு அணைத்தும் அனுப்ப பட்ட பின்னர் நான்கு உள்ளூராட்சி மன்றத்தையும் பள்ளிக் கடிதங்களை அனுப்பி தடுத்த இன்றைய கல்முனை பிரதிநிதியும் முந்தைய சாய்ந்தமருது மாகாணசபை உறுப்பினரும் என்ன பதில் கூறுவார்கள்?
சம்பிக்க ரணவக்க, சரத் வீர சேகர போன்ற இனவாதிகள் இருக்கும் போதே இந்த மாவட்டத்தின் அரணாக அதாஉல்லாஹ் இருந்திருக்கிறான் என்பது இறக்காம மயக்கல்லியில் சிலை வைத்த போதும் 12000ஏக்கர் திகாவாபி நிலம் என தயா கமகே கூறிய போதும், 86 சிலைகள் அம்பாரையில் வைக்க தற்போது அனுமதி கிடைத்திருக்கும் நிலையில் நாம் உணரமுடியாதா?

வட்டமடு, நுரைச்சோலை வீடுகள், கரும்பு செய்கை என்பனவற்றுக்கு தீர்வு மிக நீதமாக பெற பல்வேறுபட்ட தரப்புக்களுடன் அதாஉல்லாஹ் பேசினார் என்பதும் அதை இடையில் வந்து கெடுத்து நீதிமன்ற அனுகுமுறைகளை உட்படுத்தி தமது அரசியல் தேவைகளுக்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேற்றும் சின்னத்தனமான அரசியலை யார் செய்கிறார்கள்?

நல்லாட்சி எனும் அரசு வந்தும் இவர்களால் வாய்ச் சொல்லில் வீரம் பேசுவது மக்களுக்கு புரியாமலா போய்விடும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதாஉல்லாஹ் மகிந்தவைஆதரித்தார். முஸ்லீம்தலைவர்கள் அனைவரூம் தமது நலன்களை கருத்திற் கொண்டு நல்லாட்சியை உருவாக்கினர்.

பெளத்த அடக்குமுறை கெதிராக உதாரணமாக ஞானசார தேரரின் இஸ்லாத்துக்கெதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வாக்களிப்பதாக கருதியே முஸ்லீம்களை அதன் தலைவர்கள் ஏமாற்றினார்கள் ஆனால் அதாஉல்லாஹ் உண்மை உரைத்ததனால் தனது அதிகார ஒழுங்கை இழந்து விட்டாலும் இன்று மக்களுக்கு இந்த ஆட்சி சொன்ன செய்தி என்ன?

இன்னும் இந்த மக்களை முட்டாள்கள் என நம் தலைவர்கள் நினைக்கிறார்களா?

அஷ்ரப் எனும் தலைவரின் மறைவுக்கு பின்னர் தனது பதவியை பறி கொடுத்து சமுகத்தை வாழ வைக்க துணிந்தவன் அதாஉல்லாஹ்
அன்று வன்னியில் பிறந்த ஒருவன் வன்னியை பார்க்கிறான், மட்டக்களப்பு மண்ணில் நாம் கையை வைத்தால் அதன் பிரதிநிதி இழக்கப்படுவானோ என நினைத்த நினைப்புக்கள் தான் அவரது கட்சியையும் கொள்கையும் முன்னெடுக்க முடியாமல் போனது. ஆனால இன்று அவ்வாறில்லை
முழு முஸ்லீம் சமுகத்தையும் அவதியில் தள்ளிஅவர்களின் வாழ்வை சூனியமாக்கியதால் அதாஉல்லாஹ் தனது சத்திய பரி வலம் ஆரம்பிப்பதில் சிலருக்கு நிம்மதி இழக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கெதிராக பேசுவதென்றால் நாம் நோர்வே யிலிருந்து குமாரி வரைக்கும் பேச முடியும் வில்பத்திலிருந்து கொக்கைன் வரைக்கும் பேச முடியும் உங்களின் பண்புகள் எம்மிடமில்லை என்பதால் நாம் பேசப் போவதில்லை.

உண்மை தோற்பது போல் தோன்றினாலும் இறுதியில் உண்மையே வெற்றி பெறும்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post