Jul 28, 2017

முல்­லைத்­தீவில் வாழ புதிய பரம்­பரை முஸ்­லிம்­க­ளுக்கும் உரித்­துண்டு

 கூட்­ட­மைப்பை சந்­தித்து ந.தே.மு. வலி­யு­றுத்து                                                                                                   

புதிய தலை­முறை முஸ்லிம் இளைஞர், யுவ­தி­க­ளுக்கும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வாழும் முழு உரி­மையும் உண்டு என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்ட முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யங்கள் தொடர்­பான விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துடன் மேற்­கொண்­டது. 
இதன்­போதே மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

த.தே.கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர்  பொறி­யி­ய­லாளர் அப்­துர்­ரஹ்மான், பொதுச்­செ­ய­லாளர் நஜா முஹம்மட் மற்றும் தலை­மைத்­துவ சபை உறுப்­பினர் முஜி­புர்­ரஹ்மான், சட்­டத்­த­ரணி இம்­தியாஸ்  ஆகி­யோரும் இச்­சந்­திப்பில் கலந்து கொண்­டனர்.

மீள்­கு­டி­யேறும்  முல்­லைத்­தீவு மாவட்ட முஸ்லிம் மக்­க­ளுக்­கான காணி ஒதுக்­கீடு தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக தெரி­விக்­கப்­பட்­டு­வரும் எதிர்ப்­புக்கள் தொடர்பில் இச்­சந்­திப்பின் போது விசே­ட­மாக கவனம் சொலுத்­தப்­பட்­டது. l990இல் முஸ்­லிம்கள் வடக்கிலிருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­போது முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் இருந்து ஏறத்­தாழ 1700  குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்­டன. கடந்த 27 வரு­டங்­களில் இவர்கள் கிட்­டத்­தட்ட 4500 குடும்­பங்­க­ளாக மாறி­யுள்­ளன.

இவர்கள் அத்­தனை பேருமே தமது பாரம்­ப­ரிய வாழ்­வி­ட­மான முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மீள்­கு­டி­யே­று­வ­தற்­கான அடிப்­படை உரி­மை­களை கொண்­ட­வர்கள் ஆவர். இவர்­களில் ஏறத்­தாழ 3020 குடும்­பங்கள் ஏற்­க­னவே மீள்­கு­டி­யே­றி­யுள்­ளன. இவர்­களில் சொந்தக் காணி­களை கொண்­டி­ருந்த கிட்­டத்­தட்ட 1500 குடும்­பத்­தி­னரை தவிர மிகு­தி­யான 1520 குடும்­பங்­க­ளுக்கு காணிகள் வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. இவர்கள் தாம் நிரந்­த­ர­மாக வாழ்­வ­தற்­கான அரச காணி­களை கோரி ஏற்­க­னவே விண்­ணப்­பித்­துள்­ளனர்.

கடந்த ஆண்­டு­களில் நடை­பெற்ற மூன்று காணிக் கச்­சே­ரி­களில் இவை பரி­சீ­லிக்­கப்­பட்டு முதல்­கட்­ட­மாக கிட்­டத்­தட்ட 920 எண்­ணிக்­கை­யான குடும்­பங்­க­ளுக்கு அரச காணி­களை ஒதுக்­கு­வ­தற்­கான அங்­கீ­கா­ரமும் வழங்ப்­ப­ட்டது. அதன்­படி , முறிப்பு என்ற பகு­தியில் காணி­களை வழங்­கு­வ­தற்­கான முயற்­சிகள் பிர­தேச செய­ல­கத்­தி­னூ­டாக மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் பின்னர் அது நடை­பெ­ற­வில்லை.

அதற்கு மாற்­றீ­டாக, கூழா­மு­றிப்பு என்ற இடத்தில் காணி­களை பங்­கீ­டு­வ­தற்­கான முயற்சி  தற்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்ட போது இதற்­கான கடும் எதிர்ப்பை த.தே.கூ. கட்­சியின் மாகாண சபை உறுப்­பினர் ஒரு­வரின் தலை­மை­யி­லான அணி­யினர் தொடர்­ச்சி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். மட்­டு­மின்றி இம்­மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்­களை பரப்பும் வகையில் ஆர்ப்­பாட்­டங்­களும், பேர­ணி­களும் நடத்­தப்­பட்­டன. இந்­நி­லைமை தொடர்ந்தால் ,  தமிழ் – முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யி­லான உறவில் அபா­ய­க­ர­மான பாதிப்­புகள் மீண்டும் உரு­வாக்கக் கூடிய நிலை காணப்­ப­டு­கி­றது.
 
வடக்கில் நடை­பெற உள்ள தேசிய மீலாத் தின நிகழ்ச்­சித்­திட்­டத்தின் ஊடாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மீள்­கு­டி­யேறும் மக்­க­ளுக்­காக வீட்­டுத்­திட்டம் ஒன்று அமைக்­கப்­பட உள்ள நிலையில் இந்த காணி பகிர்­வினை தாம­திக்­காமல் மேற்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.
இந்த நிலை­மை­களை எடுத்­துக்­கூ­றிய ந.தே.மு. பிர­தி­நி­திகள், த.தே.கூ. தலை­மைத்­துவம் நேர­டி­யாக இதில் தலை­யீடு செய்து நீதி­யான முறையில் இது தீர்க்­கப்­ப­டு­வ­தற்­கான உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைத்­தனர்.

மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு வட மாகாண சபை தேர்­தலின் போது த.தே.கூ.– ந.தே.மு.வுக்­கு­மி­டையில் செய்து கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­யிலும் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விடயம் தெளி­வாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 90களில் வெளி­யே­றிய குடும்­பங்­க­ளுக்கு மட்­டு­மின்றி அவர்­களின் பரம்­ப­ரை­யி­னரும் வடக்கில் மீள்­கு­டி­யே­று­வ­தற்­கான அத்­தனை உரி­மை­க­ளையும் கொண்­டுள்­ளனர் என்ற விடயம் கூட்­ட­மைப்பு – ந.தே.மு. உடன்­ப­டிக்­கையில் மிகத் ­தெ­ளி­வாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த விட­யங்­க­ளையும் கூட்­ட­மைப்பு தலை­மைத்­து­வத்­திடம் ந.தே.மு. பிர­தி­நி­திகள் மிக தெளி­வாக எடுத்­து­ரைத்­தனர்.

ந.தே.மு. வினால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டது. குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேறிய மக்களுக்கும் அவர்களது சந்ததியினர் அத்தனை பேருக்கும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான உரிமை இருக்கிறது என்ற அடிப்படை நியாயத்தினையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி சுமுகமான தீர்வு ஒன்றினை விரைவாக எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ந.தே.மு. யிடம் அவர்கள் உறுதியளித்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                                               
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post