கிழக்கு ஆளுநராக சேகு இஸ்ஸதீன் அல்லது பேரியல் ; சந்திரிக்கா முஸ்தீபுகிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநர்  ஒருவரை நியமிக்க அரசாங்கம் எத்தனித்து வருகிறது.

இந்த அடிப்படையில் முன்னால் அமைச்சர் ஒருவருக்கு ஆளுநர் பதவியை வழங்க சிறிலங்கா சுதந்திர கட்சி திட்டமிட்டிருந்த போதிலும் குறித்த அமைச்சர் அந்த பதவியினைப் பெற்றுக் கொள்ள தயங்கிய காரணத்தினால் சந்திரிக்கா பண்டாரணாயக்க குமாரதுங்க அவர்களிடம் ஆளுநர் நியமிப்பது தொடர்பாக வினவப்பட்டுள்ளது.

சந்திரிக்கா தரப்பு முன்னால் ஊடகத்துறை பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மற்றும் முன்னால் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களையும் பரிந்துரை செய்துள்ளார். என்றாலும் கூட  அரசாங்கம் சிங்கள ஒருவருக்கே குறித்த பதவியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.