அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்புறிம்சி ஜலீல்

குருநாகல் - கெகுணகொல்ல அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர், மாவிலாறு குளத்தில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி, இன்று (15) உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


கெகுணகொல்ல - அறக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோரே இவ்வாறுஉயிரிழந்துள்ளனர்.குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள், மூதூர் சென்ற போது, மாவிலாறு குளத்தைப்பார்வையிட சென்ற வேளை, தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து, தோணிகவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில்வைக்கப்பட்டு  இன்று (16) ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது .

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.