கொலன்னாவையில் பதற்றம் : எரிபொருள் ரயில் இடைமறிப்பு.!
கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயில் இடைமறிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோலிய தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊழியர்களினாலேயே கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து,இந்த ரயில் இடைமறிக்கப்பட்டுள்ளது.

தமது பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவுபெறும்வரை ரயிலை விடுவிக்கப்போவதில்லை என, அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.