சிலோன் முஸ்லிம் ஊடக வலையமைப்பின் கிழக்குபிராந்தியத்திற்கான கிளை இறக்காம மண்ணில்….

ஐந்து வருடங்களாக சமூக ஊடகத்துறையில் அரும்பணியாற்றிவருகின்ற எமது சிலோன் முஸ்லிம் ஊடக வலையமைப்பானது. தனது கிழக்குப் பிராந்தியகிளையினை இன்று இறக்காம மண்ணில் வித்திட்டது.

இந்நிகழ்வானது, கிழக்கு மாகாண கிளையின் பணிப்பாளர் எஸ்.எம்.சன்சீர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஊர்ப்பிரதானிகள் மற்றும் கல்விமான்கள்  கலந்துசிறப்பித்தனர்.

காரியாலய திறப்பு நிகழ்வுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதம அதீதிகளாக இறக்காம உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முஸப்பீர் மற்றும் இறக்காம பிரதேச குவாசி நீதவான் கே.எல்.எம்.ஹாசிம், தமண பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜௌபர்இறக்காம பிரதேச இணக்க சபைத்தலைவர் பீ.ரி.சுபைதீன் இறக்காம பிரதேச வைத்திசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சி.ஐ.முஹம்மட் சூபிஹசன், முன்னால் பிரதேச சபைத் தவிசாளர் மௌலவி யு.கே.ஜெபீர் வைத்தியர் இம்ரான் ரசீட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அழகிய முறையில் ஆரம்பம் செய்யப்பட்ட இந்நிகழ்வில்  எமது ஊடகத்தின் எதிர்காலம் சிறப்புறும் வகையிலும் நடுநிலைமை பேணுகின்ற ஒரு ஊடகமாக திகழ வேண்டுமெனவும் இது எமது மண்ணுக்கு கிடைத்த ஒரு வெற்றிப்படி எனவும் கலந்து கொண்ட அனைத்து அதீதிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

விசேடமாக பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிலோன் முஸ்லிம் கிழக்குப்பிராந்திய காரியாலயத்திலிருந்து.