;கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் சிலோன் முஸ்லிம் இறக்காமம் காரியாலயத்திற்கு விஜயம
இறக்காமம் சிலோன் முஸ்லிம் ஊடக வலையமைப்பின் கிழக்கு பிராந்திய அலுவலகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் இன்று காலை 10.00 மணியளவில் (2017.07.30) விஜயம் மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது அவர் கருத்து தெரிவிக்கையில் சிலோன் முஸ்லிம் ஊடக வலையமமைப்பானது சமூக,கலாசார,அரசியல் மற்றும் இதர செயற்பாடுகளை வழங்குவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றமை பாராட்டப்பட வேண்டியதாகும், அதே போன்று இவ்வலையமைப்பானது தனது 5 வருடங்கள் தாண்டியும் பிராந்தியம் மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலும் தமது பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

இறக்காமத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் சிலோன் முஸ்லிம் ஊடக அலுவலகத்தின் சேவைகள் பக்கச் சார்பின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தனது ஆசீர்வாதங்களை தெரிவித்ததோடு சிலோன் முஸ்லிம் ஊடக வலையமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளராக எஸ்.எம்.சன்சீர் நியமிக்கப்பட்டிருக்கின்றமைக்கும் தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.


சிலோன் முஸ்லிம் கிழக்குப்பிராந்திய காரியாலயத்திலிருந்து