கிழக்கின் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கிழக்கு மாகா ண ஆளுநராக கடந்த 04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கமைய இன்று (7.11.2017) காலை தனது கடமைகளை திருகோணமலை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண வீதிய அபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்  அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்டவர்களுடன் ஆளுனரின் செயலாளர், திணைக்கள தலைவர்கள், செயலாளர் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.