அரசாங்கத்தின் பலவீனம் நேற்றைய சம்பவத்தில் இருந்து தெளிவாகிறது - அனுரகனிய வள எண்ணெய் சேவையாளர்களின் போராட்டத்தை இராணுவத்தினரை கொண்டு ஒடுக்க முற்பட்டமை அரசாங்கத்தின் இயலாமையை வெளிக்காட்டுவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டின் சொத்துகள் பலவற்றை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஹம்பாந்தொட்டை துறைமுகமும் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்களின் நீண்டகால கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் இருப்பதன் பின்னணியில், தனியார் மயப்படுத்தல் நோக்கமே இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றையதினம் இராணுவத்தை பயன்படுத்தி எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்களை பலவந்தமாக அகற்றி அந்த பணிகளை இராணுவத்தைக் கொண்டு முன்னெடுத்தமை, அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.